close
Choose your channels
Rajavamsam

குஷ்பு, மீனாவுடன் ரஜினியின் 'அண்ணாத்த' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, October 17, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் தீபாவளி திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான சிங்கிள் பாடல் மற்றும் டீஸர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியுடன் குஷ்பு மற்றும் மீனா இணைந்து நடனமாடும் ’மருதாணி’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் டி. இமான் இசையில் நாகேஷ் அஜிஸ், அந்தோணிதாசன், வந்தனா ஸ்ரீனிவாசன், மணி அமுதவன் ஆகியோர் பாடிய இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz