close
Choose your channels
Por
Joshwa

ரஜினிக்கு வில்லனாக இந்த பிரபல நடிகர்-இயக்குனரா?  லோகேஷின் வேற லெவல் பிளான்..!

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த சில தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பது பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் ஆரம்ப கட்ட பணிகளை லோகேஷ் கனகராஜ் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரஜினியை தனது குருவாக ஏற்றுக் கொண்ட ராகவா லாரன்ஸ், ரஜினிக்கு வில்லனாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.