close
Choose your channels
Por
Joshwa

விளையாட்ல மதத்தை கலந்துருக்கிங்க.. குழந்தைங்க மனசுல விஷத்தை வளர்த்துருக்கீங்க: 'லால்சலாம்' டீசர்..!

Sunday, November 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் எதிரெதிர் கிரிக்கெட் அணியின் வீரர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இடையே வரும் பிரச்சனை எப்படி மதப் பிரச்சினையாக மாறுகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு முஸ்லிம் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும், அவர் ’விளையாட்ல மதத்தை கலந்துருக்கிங்க.. குழந்தைங்க மனசுல விஷத்தை வளர்த்துருக்கீங்க’ என்று பேசும் வசனம் மாஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் மாஸ் ஸ்டண்ட் காட்சிகள் என ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ரஜினியின் கேரக்டர் அமைந்திருக்கும் என்பது டீசரிலிருந்து தெரிய வருகிறது.

மொத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படம் ரசிகர்களுக்கான சரியான பொங்கல் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.