close
Choose your channels
IKK

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Thursday, October 28, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் கையால் இந்தியாவின் மிக உயர்ந்த திரைஉலக விருதான தாதா சாகேப் பால்கே விருதை வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியபோது ’ரஜினிகாந்த் அவர்கள் நலமாக இருக்கிறார் என்றும் வழக்கமான உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனை சென்று இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இரவு அல்லது நாளை காலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz