close
Choose your channels

சமீபத்தில் வெளியான படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’83’. கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்திருந்த இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, ஜீவா உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படத்தை கபீர் கான் என்பவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு கிரிக்கெட் பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’83’ படத்தின் குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘என்ன ஒரு திரைப்படம்! மிகச்சிறந்த படம். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் ரன்வீர்சிங், ஜீவா உள்பட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’மாநாடு’ ’ராக்கி’ ஆகிய படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது ’83’ படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.