close
Choose your channels
Viruman
Laal

சரவெடி சத்தம் அகில உலகமெங்கும் ஒலிக்க: 'அண்ணாத்த' டிரைலர் ரிலீஸ் தேதி!

Tuesday, October 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

‘அண்ணாத்த’ படத்தின் டிரைலர் வரும் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை வெளியான பாடல்கள் மற்றும் டீசரில் ரஜினிகாந்தின் காட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் இந்த ட்ரெய்லரில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களின் காட்சியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.