close
Choose your channels
Viruman
Laal

ஓடிடி தளத்தில் திடீர் திருப்பம்: களமிறங்குகிறார் சூப்பர் ஸ்டார் நடிகர்!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓடிடி என்ற புதிய தளம் வந்த பிறகு திரை உலகினருக்கு புதிய கூடுதல் வருமானம் வருகிறது என்பதும் அது மட்டுமின்றி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வருமானம் பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஆஹா என பல்வேறு விதமான ஓடிடி தளங்கள் இருக்கும் நிலையில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் புதிய ஓடிடி தளம் ஆரம்பிக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் இதனை அடுத்து ஓடிடி தளத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் SRK+ என்ற பெயரில் ஷாருக்கான் ஆரம்பிக்கவுள்ள இந்த ஓடிடி தளம் டிஸ்னி-ஹாட்ஸ்டாருடன் இணைந்து ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்பதும் இது குறித்த முழு விவரங்களை அவரே விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கானை அடுத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களும் புதிய ஓடிடி தளங்களை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.