close
Choose your channels
NMM

பிக்பாஸ் 6வது சீசனிலும் ஒரு சூப்பர் மாடல் நடிகை: யார் இவர் தெரியுமா?

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 9-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருவதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் திரைப்பட நட்சத்திரங்கள், நடன இயக்குனர்கள், தொகுப்பாளர்கள், பாடகர்கள் இருப்பது போல் மாடலிங் துறையில் இருக்கும் சூப்பர் மாடல்கள் இடம் பெறுவார்கள் என்பது தெரிந்ததே. முதலாவது சீசனில் ஆரவ், ரைசா வில்சன், மூன்றாவது சீஸனில் மீராமிதுன், தர்ஷன், 4-வது சீசனில் பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, சனம் ஷெட்டி, 5 வது சீசனில் அக்சரா ரெட்டி, நதியாசாங், நிரூப் மற்றும் ஸ்ருதி பெரியசாமி ஆகிய சூப்பர் மாடல்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில் இந்த சீசனில் ஒருசில மாடல்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் ஒருவர் சூப்பர் மாடல் ஷெரினா என்று கூறப்படுகிறது. பிரபல மாடல் அழகியும் நடிகையுமான ஷெரினா, மாடலிங் துறையில் பிரபலமானவர் மட்டுமன்றி சமுத்திரக்கனி நடித்த ’வினோதய சித்தம்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் மாடல் ஷெரினாவுக்கு இப்போதே நெட்டிசன்கள் ஆர்மிகளை தொடங்கி தெறிக்க விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.