close
Choose your channels
anabel
friendship

தமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா?

Tuesday, August 3, 2021 • தமிழ் Comments

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே. அதே போல் ’த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகமும் ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு மலையாள திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மலையாளத்தில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ’நாயட்டு’. மார்ட்டின் பிரக்காட் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் த்ரில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றுள்ளதாகவும் அவரே இந்த படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ஹிந்தியில் ஜான் ஆபிரகாம் இந்த படத்தின் உரிமையை வாங்கி இருப்பதாகவும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ’நாயட்டு’ திரைப்படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz