close
Choose your channels
Rocketry
Yaanai

கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்: டைட்டில் இதுதான்!

Wednesday, July 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சன்னி லியோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு சில சர்ச்சை காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் அதன் பின்னர் நீதிமன்றத்தால் அவர் நிரபராதி என்று நிரூபிக்க பட்டார் என்பதும் அதன் பின்னர் கிரிக்கெட்டில் ஈடுபடாமல் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரீசாந்த் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் அந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ’பட்டா’ என்பதாகும்.

இந்த படத்தில் ஸ்ரீசாந்த் ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஸ்ரீசாந்த் ஒரு புலனாய்வு துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதன்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி ஆகும் ஸ்ரீசாந்த், சன்னிலியோனுடன் சேர்ந்து ஹிட் கொடுத்து பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.