close
Choose your channels
NMM
NMM

குஷ்பு எனக்கு கால்ஷீட் கொடுக்கல.. சுந்தர் சி சொன்ன பொய்யை போட்டுடைத்த டிடி!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’காபி வித் காதல்’ படத்தில் நடிக்க குஷ்புவிடம் கால்சீட் கேட்டதாகவும் ஆனால் குஷ்பு தனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும் சுந்தர்சி கூறிய போது அது பொய்யென குஷ்பூ மற்றும் டிடி மாறி மாறி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் சிஇயக்கத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’காபி வித் காதல். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. சுந்தர்சி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் தயாரிப்பாளராக குஷ்பு கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் குஷ்பு பேசிய போது, ‘ஊட்டியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தது என்றும் அப்போது என்னை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்றும் ஒரு நாளாவது சூட்டிங் பார்க்க வருகிறாயா என்று கேட்கவே இல்லை என்றும் குஷ்பு காமெடியாக கூறினார். மேலும் வேறு வழியில்லாமல் திருமண நாளன்று நான் தான் ஊட்டி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது இந்த படத்தில் இடம் பெற்ற ’ரம் ரம் ரம் ஆரம்பம்’ என்ற பாடலில் நடிக்க என்னை அழைக்கவில்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த டிடி ‘இந்த பாடலில் குஷ்பு கட்டாயம் நடிக்க வேண்டும் என்று நாங்கள் சுந்தர் சியிடம் கேட்டபோது, குஷ்பு தான் எனக்கு கால்ஷீட் தரவில்லை என்று கூறினார் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த குஷ்பு, ‘என்னிடம் படப்பிடிப்பிற்கு முந்தைய நாள்தான் கால்ஷீட் கேட்டார் என்றும் முந்தைய நாள் கேட்டால் எப்படி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். இந்த சுவாரஸ்யமான உரையாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.