close
Choose your channels
Por
Joshwa

'சுந்தரி' சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம்: மணப்பெண்ணும் சீரியல் நடிகைதான்.. வைரல் புகைப்படங்கள்..!

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி’ சீரியல் நடிகருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான ’திருமகள்’ சீரியல் நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன

தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் பல நடிகர் நடிகைகள் வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்து உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ’சுந்தரி’ என்ற சீரியலில் கிருஷ்ணா காந்தன் என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் அரவிஷ், சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ’திருமகள்’ சீரியலில் நடித்த ஹரிகா சாது என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்,.

இந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை அரவிஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

மேலும் அரவிஷ்-ஹரிகா திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.