close
Choose your channels

விஜய் ஆண்டனி-கிருத்திகா படத்தின் நாயகி இவர்தான்!

Friday, July 21, 2017 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன்பின்னர் ஹீரோவாக தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. தற்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்ட விஜய் ஆண்டனி, 'முப்பரிமாணம்', 'அண்ணாத்துரை', 'காளி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றில் 'காளி' படத்தை இயக்குபவர் பிரபல நடிகர் உதயநிதியின் மனைவியும், 'வணக்கம் சென்னை' படத்தின் இயக்குனருமான கிருத்திகா என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி-கிருத்திகா முதல்முதலில் இணையும் 'காளி' படத்தின் நாயகியாக சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சுனைனா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இயக்குனர் கிருத்திகா தனக்கு மிக அற்புதமான கேரக்டரை கொடுத்துள்ளதாகவும், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வேன் என்றும் சுனைனா தெரிவித்துள்ளார். மேலும் தான் அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சுனைனா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சுனைனாவை தவிர மேலும் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த செய்தி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz