close
Choose your channels

கொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை!

Monday, May 17, 2021 • தமிழ் Comments

தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிக்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கடந்த சில நிமிடங்களுக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரூபாய் 50 லட்சம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொடுத்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சன் டிவி குழுமம் ரூபாய் 10 கோடி நிவாரண நிதியாக அளித்துள்ளது.

சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் அவர்கள் ரூபாய் 10 கோடிக்கான காசோலையை கொடுத்தார். அப்போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறனின் மனைவி காவேரி ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz