பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகளா இது? நெட்டிசன்களை அலற வைத்த வைரல் புகைப்படம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்- கௌரி கான் தம்பதியினருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றுதான். இதில் மிகவும் எதிர்ப்பார்ப்பு கொண்ட நட்சத்திர குழந்தையான சுஹானா கான் நடிப்பில் ஆர்வம் உள்ளவர் என்றும் அவர் லண்டன் கல்லூரியில் நடிப்பு குறித்த பட்டப் படிப்பை படித்து வருகிறார் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் கடந்த ஆண்டு சுஹானா கான் நடித்த ஒரு குறும்படத்தின் டீசரும் வெளியாகியது. அது சுஹானா இங்கிலாந்தில் உள்ள Ardingly கல்லூரியில் படித்தபோது உடன் பயின்ற தியோடர் கிமேரோ என்பவரால் இயக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சுஹானா நியூயார்க்கில் படித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சுஹானா கான் தொடர்ந்து தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட இவர் போடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது சுஹானா கான் சமையல் அறையில் எதோ ஒரு காய்கறியை துருவுவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சுஹானா கான் இப்போதே நடிப்பிற்கு தயாராகி விட்டார் என்றும் அவரது மேக்கப் மற்றும் உடை அணைத்தும் தேர்ந்த ஒரு மாடலைப் போன்றே இருக்கிறது என்றும் கமெண்ட் பதிவிட்டு உள்ளனர். சுஹானா கானின் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.