சிவகார்த்திகேயனுக்கு நடிப்பு சொல்லி கொடுத்த சுதா கொங்கரா.. பிறந்த நாள் வாழ்த்து வீடியோ வைரல்


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பராசக்தி’ திரைப்படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில் ’பராசக்தி’ படத்தின் வீடியோவை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு ’மதராசி’ என்று வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.
அதே நேரத்தில், ’பராசக்தி’ படப்பிடிப்பின் போது எடுத்த சில காட்சிகளின் வீடியோவை, இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்டு, தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அந்த வீடியோவில், அவர் சிவகார்த்திகேயனுக்கு நடிப்பு சொல்லி காட்சிகளும், அவர் சொன்னபடி சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy bday hero !!! @Siva_Kartikeyan
— Sudha Kongara (@Sudha_Kongara) February 17, 2025
You are an absolute delight to work with cos finally it’s the journey and the company that makes one want to continue making cinema !💥 #Parasakthi pic.twitter.com/ZbCNkyKwNA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com