ஆல்பாஸ் அரியர் செல்லாது: யுஜிசி திட்டவட்டம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்வுக்கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அரியர் மாணவர்களை தேர்ச்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி பதிவு செய்த வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இறுதி செமஸ்டர் மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
இறுதி பருவ தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் எனவும் உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளதால் அரியர் மாணவர்கள் பாஸ் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு செல்லாது என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் தேர்ச்சி பெற்றதாக நினைத்துக்கொண்டிருக்கும் அரியர் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.