close
Choose your channels
Don

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ரஜினி சீன்: கேமிராவில் யார் தெரியுமா?

Friday, December 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் ஒரு காட்சியை இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது அதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார். அப்போது சல்மான்கானுக்கு ரஜினிகாந்த் நடிப்பது போன்ற ஒரு காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டுமென சொல்லி கொடுத்தார்.

அந்த காட்சியில் ’நீங்கள் பழைய ரஜினிகாந்த் போல் நடிக்க வேண்டும், உங்கள் வாயில் சிகரெட் இருக்கின்றது, வில்லன்கள் உங்களைப் பார்த்து சுடுகிறார்கள், அப்போது புல்லட் உங்களை நோக்கி வரும் போது நீங்கள் சிரித்துக்கொண்டே ஸ்டைலாக திரும்புகிறீர்கள், அப்போது புல்லட் சிகரெட்டில் உரசி பற்றிக் கொள்கிறது என்று எஸ்எஸ் ராஜமெளலி கூறுகிறார்.

இதனை அடுத்து சல்மான்கான், ரஜினிகாந்த் போன்று அந்த காட்சியை நடிக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ரஜினிகாந்த் மாதிரி சல்மான் கான் நடிக்கும் காட்சியை இயக்கிய எஸ்எஸ் ராஜமெளலி, உண்மையிலேயே ரஜினிகாந்த் படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.