close
Choose your channels

இணையத்தை கலக்கும் ஸ்ரீதர் மாஸ்டர் மகளின் நடன வீடியோ

Wednesday, May 12, 2021 • தமிழ் Comments

தமிழ் திரை உலகில் நடன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகளுடன் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ’நாக்கமுக்க’ உள்பட பல திரைப்பட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ஸ்ரீதர் மாஸ்டர். இவர் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் அவருடைய மகள் அக்ஷரா இணைந்து ஆடிய நடன வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் பல பாடல்களுக்கு இருவரும் குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர். ‘எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகளை வேற லெவலில் நடனமாட வைத்திருப்பதை அடுத்து இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது

ஸ்ரீதர் மாஸ்டர் போலவே அவரது மகள் அக்ஷராவும் விரைவில் டான்ஸ் மாஸ்டரா ஆகிவிடுவார் என்பதற்கு இந்த வீடியோவை சாட்சி என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன

Get Breaking News Alerts From IndiaGlitz