close
Choose your channels
LoveToday
CWK

'ஜெயிலர்' படத்தில் பணிபுரியும் செளந்தர்யா ரஜினியின் தோழி.. நெகிழ்ச்சியான பதிவு!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினியின் தோழி பணிபுரிவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் இது குறித்து அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவரை அவரது கணவர் விசாகன் தாங்கிக் கொள்ளும் காட்சி உள்ளது. இந்த நெகிழ்ச்சியான பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:

தாமதமான பதிவு ஆனாலும் மிகவும் மனமார்ந்த பதிவு. எங்களின் சில அழகான தருணங்களை புகைப்படம் எடுத்த அமிர்தா அவர்களுக்கு நன்றி. நாங்கள் இந்த போட்டோஷூட்டை வேடிக்கையாக செய்தோம்.

மேலும் எனது கணவர் விசாகன், எனக்கு மற்றும் வேத் ஆகிய மூவருக்கும் சிறப்பான முறையில் மேக்கப் செய்த எனது எனது தோழி பல்லவிக்கு நன்றி. தற்போது அவர் ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.