close
Choose your channels
cred

'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அட்டகாசமான அப்டேட்

Thursday, January 23, 2020 • தமிழ் Comments

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் ’சூரரைப்போற்று’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டன. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற மாறாதீம்’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சூர்யா பாடலை பாடிய இந்த பாடலின் ஒரு சில காட்சிகளும் சமூகவலைதளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை மாலை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz