close
Choose your channels

உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டுமின்றி வசூலிலும் நல்ல சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் இந்த படத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்த தகவல் வெளிவந்துள்ளது.

உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்று ஆயிரம் படங்கள் குறித்த அறிவிப்பை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் The Shawshank Redumption என்ற படமும் இரண்டாவது இடத்தில் ’தி காட்பாதர்’ என்ற படமும் உள்ள நிலையில் ‘சூரரை போற்று’ திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு தமிழ் படம் ஒன்று உலக அளவிலான ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய பெருமை என்று கூறப்பட்டு வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz