close
Choose your channels
RaRa

'சூரரை போற்று' நாயகி அபர்ணாவின் அடுத்த பட தகவல்!

Monday, July 26, 2021 • தமிழ் Comments

சூர்யா நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான ’சூரரைப்போற்று’ கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சூரரைப்போற்று நாயகி அபர்ணா பாலமுரளியின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சூப்பர் ஹிட்டான ’பதாய் ஹோ’ என்ற பாலிவுட் திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz