close
Choose your channels

கொரோனாவில் இருந்து மீண்ட ரியல் ஹீரோவான வில்லன் நடிகர்!

Friday, April 23, 2021 • தமிழ் Comments

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏராளமான பொதுமக்களுக்கும் உதவி செய்த பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பெற்ற சோனு சூட் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் அவர் பொது மக்களுக்கு உதவி செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பதும் அந்த நேரத்திலும் அவர் பலருக்கு உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சோனு சூட் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சோனுசூட் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு நெகட்டிவ் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Get Breaking News Alerts From IndiaGlitz