close
Choose your channels
siren
lal_salaam

தமன்னா நடித்தால் நடிக்க மாட்டேன் என கூறிய நடிகைகள்: பிரபல ஹீரோ கூறிய ரகசியம்..!

Friday, November 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமன்னா நடித்த படத்தில் நாங்கள் நடிக்க மாட்டோம் என பல நடிகைகள் பின்வாங்கியதாக பிரபல ஹீரோ ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக தமன்னா இருந்து வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ’ஜெயிலர்’ திரைப்படத்தில் அவர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினாலும் அந்த பாடல் மூலம் அவர் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக தமன்னா ’பாந்த்ரா’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இதுவரை தனக்கு ஜோடியாக நடிக்காத நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என இந்த படத்தின் ஹீரோ திலீப் கூறியதை அடுத்து இயக்குனர் அருண் கோபி பல நடிகைகளை பரிசீலனை செய்ததாகவும் இறுதியாக அந்த கேரக்டருக்கு தமன்னா தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதை கூறி அனுமதி பெற்றதாகவும் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் திலீப் பேசி உள்ளார்.

இந்த படத்தில் தமன்னா தவிர இன்னொரு முக்கிய பெண் கேரக்டர் இருந்த நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பின் வாங்கினர், தமன்னா நடித்தால் எங்களது கேரக்டர் பெரிதாக தெரியாது என்பதால் ஒருசில நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டனர் என்றும் கூறினார்.

ஆனால் மம்தா மோகன்தாஸ் அந்த கேரக்டரில் தைரியமாக நடித்தார் என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் நடிகர் திலீப் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். ’பாந்திரா’ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.