close
Choose your channels
anabel
friendship

வெற்றி பெற்ற சோம்சேகரை அழவைத்த கமல்ஹாசன்!

Saturday, January 9, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற ’டிக்கெட் டு ஃபினாலே’ டாக்ஸ்கில் அதிக புள்ளிகள் எடுத்து முதலிடத்தை சோம்சேகர் பெற்றார் என்றும் அவர் நேரடியாக ஃபைனலுக்கு தேர்வு பெற்றார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இதை உறுதி செய்வது போல் சற்று முன்னர் வெளியான இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றி பெற்ற சோம்சேகருக்கு வாழ்த்துகள் என கமல்ஹாசன் கூற அதனையடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், சக போட்டியாளர்களுக்கும் நன்றி என்றும் சோம் கூறுகிறார். அப்போது டிஜிட்டல் மூலம் தோன்றும் சோம் சேகரின் தாயாரும் அவருக்கு வாழ்த்து கூறுகிறார். அப்போது சோம் தாயார் ஆனந்த கண்ணீர் வடிக்க, ‘அழாதீர்கள்’ என்று சோம் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அவரும் நெகிழ்ச்சியுடன் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கை வென்ற சோம்சேகரை அவரது தாயாருடன் பேச வைத்து அவரை கமல்ஹாசன் ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்த காட்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கை வென்ற சோம், டைட்டிலையும் வெல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz