close
Choose your channels
anabel
friendship

நடிகை கன்னிகாவை கரம் பிடிக்கும் சினேகன்: புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்!

Sunday, July 25, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன், நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஜூலை 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை கன்னிகா ரவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் என்பதும், அவர் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ என்ற திரைப்படத்தில் மாணவியாக நடித்துள்ளார் என்பதும் அதேபோல் ’தேவராட்டம்’ ’தாயின் மடியில்’ ’சத்ரபதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சினேகன் மற்றும் கன்னிகாரவி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz