close
Choose your channels
Don

மகள்கள் தினத்திற்கு சினேகா வெளியிட்ட போட்டோ!

Monday, September 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி உலக மகள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் நேற்று மகள்களை கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய மகள்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அஜித், விஜய் சூர்யா ரசிகர்கள் தங்களது விருப்பத்துக்குரிய நடிகர்களின் மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகள்கள் தின கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவரான சினேகா தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகள்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். என்னுடைய சந்தோஷம், என்னுடைய வலிமை, என்னுடைய பலவீனம், என்னுடைய உலகம் எல்லாமே எனது மகள் தான் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மகளுக்கு சினேகா முத்தம் கொடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினேகா தற்போது ’ஷாட்பூட்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.