செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்
Thursday, August 11, 2016 தமிழ் Comments
ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பின்னர் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. செல்வராகவனின் முதல் திகில் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த டீசரை வெளியிடும் விஐபி யார் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்,
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவுதமேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.