டிசம்பர் கடைசி வாரம்: ரிலீசாகும் 6 படங்களில் 4 நாயகிகளின் படங்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


2022 ஆம் ஆண்டின் கடைசி வாரமான 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 6 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன என்பதும் அதில் 4 திரைப்படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிசம்பர் 30ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'டிரைவர் ஜமுனா’ என்ற படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இன்னொரு திரைப்பட 'ஓ மை கோஸ்ட்’. பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இரண்டு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிசம்பர் 30-ஆம் தேதி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த்ரிஷா நடித்த ‘ராங்கி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடித்த ’செம்பி’ என்ற திரைப்படமும் விஜய் ஆண்டனி நடித்த ’தமிழரசன்’ என்ற திரைப்படமும் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகின்றன என்பது குறிப்பிடதக்கது.
மொத்தத்தில் இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் வெளியாகும் 6 படங்களில் 4 படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், சன்னிலியோன், த்ரிஷா என நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாக ரசிகர்களுக்கு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.