close
Choose your channels

பாலாவின் அடுத்த படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்!

Saturday, September 19, 2020 • தமிழ் Comments

தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பாலாவின் ’தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாலா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

ஆர்கே. சுரேஷ், பூர்ணா உள்பட பலர் நடிக்கும் இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz