close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

வெங்கட்பிரபுவுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்: அடுத்த படத்தில் இணைகிறார்களா?

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 11வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இதனையடுத்து இருவரும் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட்பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபுவின் 11வது படத்தின் பூஜையில் கலந்துகொண்டதால் அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.