close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

ஒரே ஷெட்யூலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்? டிசம்பரில் இன்னொரு படம்!

Wednesday, August 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதிஷங்கர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டுமே சமீபத்தில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கரும், தங்கையாக பிரபல யூடியூபர் மோனிஷாவும் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்க உள்ளார். பரத் ஷங்கர் இசையில், அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை முடித்தவுடன் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார் என்பதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.