close
Choose your channels
LoveToday
CWK

'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரின்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது என கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.