சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி மாற்றமா? குஷியில் ரசிகர்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 24ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னதாக அதாவது அக்டோபர் 21ஆம் தேதியே ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு முன்னரே இந்தப் படம் ரிலீசாகும் என்ற தகவலால் சிவகார்த்தியன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நாட்டின் நடிகை இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததை அடுத்து ’பிரின்ஸ்’ திரைப்படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments