close
Choose your channels
Por
Joshwa

'மாவீரன்' ரிலீஸ் எப்போது? சிவகார்த்திகேயனின் மெகா திட்டம்..!

Saturday, February 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடல் வீடியோ இணையதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது. ’மாவீரன்’ திரைப்படம் ஜூன் இறுதி வாரத்தில் அதாவது பக்ரீத் விடுமுறை தின நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் அந்த தேதியை பட குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.