close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'டான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

Friday, March 12, 2021 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்பின் சமீபத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போதைய தகவலின்படி இந்த படம் ரம்ஜான் திருநாளில் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ‘டான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் ஒன்றை ஸ்டண்ட் இயக்குனர் விக்கி என்பவர் தெரிவித்துள்ளார்

அவர் தனது டுவிட்டரில் கூறியபோது ‘டான்’ படத்தின் சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் குழுவினர் அனைவரும் எனர்ஜியாக இருப்பதால் அனைவருடனும் பணிபுரிவதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் கூடிய சண்டை காட்சி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படம் குறித்த இந்த அப்டேட்டை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த ட்விட்டை வைரலாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz