close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படமும் ரெடி: விரைவில் ரிலீஸ்!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக பார்க்கப்படுவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் அட்லியின் உதவியாளர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வந்த ’டான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் பேட்ச்வொர்க் பணிகளும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வரும் இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, புகழ், ஷிவாங்கி, முனிஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் இந்த படம் ’டாக்டர்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz