close
Choose your channels
PKK

லாஸ்ட்பென்ச் ஸ்டூடண்ட் பிரின்ஸ்பால் ஆனா என்ன நடக்கும் தெரியுமா? 'டான்' டிரைலர்

Friday, May 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகின்றன .

இரண்டரை நிமிடங்களுக்கு மேலாக உள்ள இந்த ட்ரெய்லரில் காமெடி மற்றும் ரொமான்ஸ், சீரியஸ் காட்சிகள் கலந்து உள்ளன. சிவகார்த்திகேயன் தனக்குள் இருக்கும் திறமையை கண்டு பிடித்து அதில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அவர் தனக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது .

நான் வேண்டுமானால் அரசியல்வாதி ஆகிவிடா? கவிஞர் ஆகிவிடா? ஸ்டண்ட் மாஸ்டர் ஆகிவிடா? மீம்ஸ் கிரியேட்டர் ஆகிவிடா? என அடுத்தடுத்து கேள்வி கேட்கும் காட்சிகளும் அதற்கு கிடைக்கும் பதில்களும் காமெடியில் கலக்கின்றன.

சீரியஸாக வரும் எஸ்ஜே சூர்யா, ‘லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ன செய்வான் என்று நீ காட்டிவிட்டாய், ஒரு லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் பிரின்ஸிபால் ஆனால் என்ன செய்வான் என்பதை நான் காண்பிக்கிறேன்’ என்று சிவகார்த்திகேயனிடம் சவால் விடும் காட்சியில் நடிப்பில் மிளிர்கிறார்.

மொத்தத்தில் ‘டான்’ திரைப்படம் காமெடி, ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் தான் என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.