close
Choose your channels
cred

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தள்ளி போகிறதா? என்ன காரணம்?

Monday, March 8, 2021 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி ‘டாக்டர்’ ப்டம் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ‘டாக்டர்’ படக்குழு வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து மார்ச் 26ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று கொண்டிருக்கும். மக்களும் தேர்தலின் மீது கவனத்தில் இருப்பார்கள். இந்த நிலையில் ‘டாக்டர்’ படம் வெளியானால் மக்களைப் போய் சேருமா? என்ற சந்தேகம் படக்குழுவினர் தரப்பில் இருந்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் பொதுமக்களை தியேட்டருக்கு கொண்டு வரும் ஒரு படம் என்பதால் இந்த படம் சரியான தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும் என படக்குழுவினர் கருதுகின்றனர். இதனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா, யோகி பாபு, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz