close
Choose your channels
Rocketry
Yaanai

சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம்: படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா?

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ள நாடு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படமான இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரடொக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் மட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யார்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.