close
Choose your channels
Por
Joshwa

'வண்ணாரப்பேட்டையில ஒரு வௌவாலு ஏங்கிருச்சாம்: 'மாவீரன்' சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

Wednesday, June 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக வெளியான அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். பரத் சங்கர் கம்போஸ் செய்த இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஆகிய இருவரும் இந்த படத்தின் நாயகன் நாயகியாக நடித்துள்ள நிலையில் இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா உள்பட புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.