close
Choose your channels

பாஜகவில் இணைகிறாரா சிவாஜி கணேசன் குடும்பத்து பிரபலம்?

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 1989ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தனது கட்சியை ஜனதா கட்சியுடன் இணைத்து அதன் மாநில தலைவராக செயல்பட்டார். அதனை அடுத்து அரசியலில் இருந்து முற்றிலும் விலகினார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி மற்றும் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் ஆகியோர் முன்னிலையில் ராம்குமார் நாளை பாஜகவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தைச் சேர்ந்த சிவாஜிகணேசனின் மகன் பாஜகவில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரை அடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தென் மாவட்ட செயலாளரும் முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயருமான கராத்தே தியாகராஜனும் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. கராத்தே தியாகராஜன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.