close
Choose your channels
aranmanai

பாடகி சுவேதா மோகனா இவர்? கலக்கலான போட்டோ ஷுட்டை பார்த்து வியந்த ரசிகர்கள்!

Tuesday, May 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களில் பின்னணி பாடகியாக இருந்துவரும் பாடகி ஒருவர் நடிகைகளைப் போன்று அசத்தலாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மென்மையான குரலால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டு பிரபலமானாவர் பாடகி சுஜாதா மோகன். அவருடைய மகள் சுவேதா மோகனும் அம்மாவைப் போலவே, மென்மையான குரலால் பின்னணி பாடகியாகி தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி சினிமாக்களில் இதுவரை 700 க்கும் மேற்பட்ட திரை இசை பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

இளையராஜா, ஏர்ஆர் ரஹ்மான், வித்யாசாகர். எம்.எம்.கீரவாணி, ஹரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, ஜிவி.பிரகாஷ், மணி ஷர்மா, தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் என்று பல இசையமைப்பாளர்களுடன் சுவேதா மோகன் பணியாற்றியுள்ளார். அந்த வரிசையில் ‘தங்க மகன்‘ திரைப்படத்தில் ‘என்ன சொல்ல‘, தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தில் ‘நீ பார்த்த விழிகள்‘, மரியான் திரைப்படத்தில் ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் என்ன?’, ‘பா. பாண்டியன்‘ திரைப்படத்தில் ‘வெண்பனி மலரே‘ என்று பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாய நதி இன்று மார்பில் வழியுதே’ என்ற பாடலையும் இவரே பாடியிருந்தார். சமீபத்தில் வெளியான ‘வாத்தி‘ திரைப்படத்தில் இவர் பாடிய ‘ஒரு தலை காதல தந்த’ பாடல் தற்போது பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் பாடகி சுவேதா மோகன் எப்போதும் டிசைனர் உடைகளை அணிந்து தனக்கென்று ஒரு டிரெண்டிங்கையும் உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிறத்திலான கவுன் உடையை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment