ரியல் மற்றும் ரீல்: சிம்ரன் பகிர்ந்த ஆச்சரியமான புகைப்படம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்த சிம்ரன் திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் ஒரு சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய ’ராக்கெட்டெரி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சிம்ரனின் நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ’ராக்கெட்டெரி’ படத்தில் நடித்தது தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் மாதவனுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணனின் குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து, ’ராக்கெட்டெரி’ படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, 'ரியல் மற்றும் ரீல்’ என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இருக்கும் இந்த புகைப்படம் சிம்ரன் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சிம்ரன் தற்போது ’அந்தகன்’, ‘கேப்டன்’, ‘துருவநட்சத்திரம்’, ‘வணங்காமுடி’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.