close
Choose your channels
Viruman
Laal

அமெரிக்காவில் இருந்து திரும்புகிறாரா சிம்பு? 'பத்து தல' படப்பிடிப்பு எப்போது?

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்பு தவிர மற்ற நடிகர்களின் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சிம்புவின் காட்சிகள் மற்றும் சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் காட்சிகள் மற்றும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிம்பு தனது தந்தை டி ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஜூலை மாதம் சிம்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதாகவும் இதனை அடுத்து ‘பத்து தல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு, பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.