close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’மஹா’. இந்தப்படம் ஹன்சிகாவின் 50வது படம் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பது குறிபிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு சில முறை அறிவிக்கப்பட்டு எதிர்பாராத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் ’மஹா’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமீல் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.