close
Choose your channels
Por
Joshwa

'தளபதி 67' படத்தில் சிம்பு தான் மெயின் வில்லனா? லோகேஷ் கொடுத்த ஹிண்ட் இதுதானா?

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தை மூழ்கடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதுவரை இல்லாத அளவில் தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் வியாபாரம் மட்டுமே 800 முதல் 900 கோடி ரூபாய் வரை செல்லும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஒரே படத்தில் ஐந்து பிரபல நடிகர்கள் ஹீரோவுக்கு வில்லன்களாக நடித்து வருகிறார்கள் என்றால் அந்த படம் எந்த அளவில் மாஸ் ஆக இருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி சிம்பு இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்கிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வரும் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி தான் இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி மூன்றாம் தேதி என்பது சிம்புவின் பிறந்தநாள் என்பதால் தான் அவர் இந்த படத்தில் இணைந்துள்ளதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் லோகேஷ் கனகராஜ் ஹிண்ட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் ஒரு பாடலை பாடிய சிம்பு, ‘தளபதி 67’ படத்தில் முக்கிய வில்லன் என்றால் அந்த படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. இப்படி ஒரு அதிசயம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.