close
Choose your channels
Viruman
Laal

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மஹா’ திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்நிலையில் சிம்பு நடிக்கும் இன்னொரு திரைப்படமான ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை சென்னை உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் படங்கள் ஜூலை மற்றும் செப்டம்பர் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.