close
Choose your channels
PatamPoochi
mayoon

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' அட்டகாசமான வீடியோ!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர் என்பதை பார்த்தோம்

அந்த வகையில் சற்று முன்னர் அந்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் இந்த வீடியோவில் சிம்புவின் ஆக்ஷன் காட்சிகள், வன்முறை காட்சிகள், ரத்தம் சொட்டும் காட்சிகள் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஏஆர் ரகுமான் இசையில் உருவான பாடலின் பின்னணியில் இருக்கும் இந்த டீசர் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஆக்சன் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

சித்தார்த்தன் நுனி ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில், ஜெயமோகன் வசனத்தில், தாமரை பாடல் வரிகளில் உருவாகி வரும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.